பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹப்புத்தளை நகரில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சவப்பெட்டியை ஏந்தியும், ஒப்பாரி வைத்தும் போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன், தமக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
அதேபோல தோட்ட நிர்வாகங்களின் அடாவடியைக் கண்டித்தும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
#SriLankaNews