இலங்கை மீனவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அந்தனியுர மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தமக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி யாழின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் அந்தனிபுரம் பகுதி மீனவர்களும் தாம் கடலில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்குமாறு கோரி 04.02.2022 இன்று காலை 09.30 மணியளவில் கறுப்புக்கொடிகளை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
#SrilankaNews