அரச அதிகாரிகளுக்கு கொடுப்பனவுகள் நிறுத்தம்!! – பஸில் அதிரடி
அரச அதிகாரிகள் கடமைக்கு வரும் நாள்களுக்கு மட்டும் எரிபொருள் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றது.
மேலும் , அமைச்சுக்களின் செலவுகளை தற்காலிகமாக குறைப்பது தொடர்பான யோசனையை சகல அமைச்சுக்களும் அடுத்த வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நிதியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாத் தாக்கத்தால் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கருத்திற்கொண்டு அரச செலவுகளை குறைப்பதற்காகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரச செலவுகளை மட்டுப்படுத்தல் தொடர்பில் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச கடந்த அமைச்சரவை கூட்டத்தில் யோசனையை முன்வைத்துள்ளார்.
Leave a comment