இலங்கையின் பல மாகாணங்களில் நாளை (12) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை பெய்யும்.
கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான பகுதிகளில் மழை பெய்யும். சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து பொத்துவில் வரையிலும் காற்றின் வேகம் மணிக்கு 45 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாகக் குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.