Three wheeler theft 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

11 முச்சக்கரவண்டிகள் மீட்பு: இயந்திர இலக்கங்களை மாற்றி விற்பனை செய்த கும்பல் நுகேொடையில் சிக்கியது!

Share

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டிகளைத் திருடி, அவற்றின் இயந்திர (Engine) மற்றும் செஸி (Chassis) இலக்கங்களை மாற்றி விற்பனை செய்து வந்த மூன்று சந்தேகநபர்களை நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடை, பதுளை, பத்தரமுல்ல மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த முச்சக்கரவண்டிகள் திருடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட வாகனங்களின் இயந்திர மற்றும் செஸி இலக்கங்களை மாற்றியும், வர்ணங்களை மாற்றியும் புதிய வாகனங்கள் போல் தோற்றமளிக்கச் செய்துள்ளனர்.

இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளை தலா 12 முதல் 13 இலட்சம் ரூபாய் வரையான விலைக்குப் பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் பதிவான ஒரு திருட்டு முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அங்குருவெல்ல மற்றும் குருவிட்ட பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 43 வயதுக்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 திருடப்பட்ட முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (12) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். பழைய முச்சக்கரவண்டிகளை வாங்கும் போது அவற்றின் ஆவணங்கள் மற்றும் இலக்கங்களை உரிய முறையில் சரிபார்க்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...