இலங்கை கடற்படையின், படகு மோதியதில், தமது படகொன்று கடலில் மூழ்கியுள்ளது எனவும் , குறித்த படகில் பயணித்த மீனவர்கள் 7 பேர், கடலில் மூழ்கிய நிலையில், ஏனைய படகுகளில் சென்ற சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர் எனவும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சப்பவம் தொடர்பில் தமிழக மீனவர்கள் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் புதன் கிழமை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் புறப்பட்ட மீனவர்கள், கச்சதீவுக்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த வேளை , இலங்கை கடற்படையினர் தமது வேக படகில் வந்து மீனவர்களை துரத்தினர்.
அதன் போது , ஒரு படகுடன் கடற்படையினரின் படகு மோதிய நிலையில், படகு கடலில் மூழ்கியது.
அதன் போது குறித்த படகில் இருந்த 7 மீனவர்களும் கடலில் மூழ்கிய நிலையில் , சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
இதேவேளை, அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் , தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு வடக்கு மீனவ சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருவதுடன் , போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நாளையதினம் காரைநகரில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி மீனவ சங்கங்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளன.
#SriLankaNews