சீனாவின் இராஜதந்திரப் பிடிக்குள் இலங்கை!-

China srilanka

சீனாவின் இராஜதந்திர அழுத்தத்திற்குள் இலங்கை சிக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தரமற்ற இயற்கை உரங்களின் இருப்புக்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சேதன பசளை விவகாரம் தொடர்பான கருத்துக்களைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் பருப்பு அல்லது கொத்தமல்லி இருக்காது.

சேதன பசளை விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தில் உள்ளவர்களின் கருத்தை இவ்வாறான வாக்கெடுப்பின் மூலம் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

எந்தவொரு நாடும் 100 சதவீத சேதன பசளைப் பாவனைக்கு மாறவில்லை. அது சாத்தியமற்றதே. சிலோன் தேயிலையின் பெயர் பாதிக்கப்படும் பட்சத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் பாரியளவில் பாதிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version