பஹ்ரைனின் சிவப்பு பட்டியலிருந்து இலங்கை மறைந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
பஹ்ரைனின் கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை இல்லாமலாக்கியுள்ளது.
உலகின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் தன்னுடைய சிவப்பு பட்டியலில் சேர்த்திருந்தது .
இந் நிலையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்று சற்று குறைந்த்துள்ள காரணத்தால் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் சிவப்பு பட்டியலில் இருந்து அகற்றுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் பஹ்ரைனின் தொழில் விசாவை பெற்று கொள்ள தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
#world
Leave a comment