செய்திகள்விளையாட்டு

முதலாது வெற்றியை பதிவு செய்தது அவுஸ்ரேலியா

Capture 7 720x450 1
Australia
Share

20-20 உலக கிண்ணப் போட்டியின் சூப்பர் 12 போட்டி இன்று ஆரம்பமாகியது.

சூப்பர் 12 போட்டியின் முதலாவது போட்டியில், அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.

5 விக்கெட்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி, அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில், நாணயற்சுழற்சியில் வெற்றியீட்டிய அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, இருபது ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

119 என்ற வெற்றியிலக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 5 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இதன்மூலம் நடப்பு வருட 20-20 தொடரின் சூப்பர் 12 போட்டியின் முதலாவது வெற்றியை அவுஸ்ரேலியா பதிவு செய்தது.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...