பிரபல CSK வீரருக்கு ‘தமிழ்’ முறைப்படி திருமண கொண்டாட்டம் : வேட்டி – சட்டையுடன் கலக்கும் வீரர்கள்

ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பலம் வாய்ந்த அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, திண்டாடி வருகிறது.

இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபல வீரருக்கு அண்மையில் நடந்த திருமண கொண்டாட்டம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இறுதியாக நடைபெற்ற IPL ஏலத்தின்போது நியூசிலாந்து அணி வீரரான டெவான் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களே வைரலாகி வருகின்றன.

கிம் வாட்சன் என்ற பெண்ணை காதலித்து வந்த டெவான் கான்வே கடந்த 2020 ஆம் ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், IPL தொடருக்காக இந்த ஜோடி மும்பையில் தங்கியுள்ளதால் தற்போது அங்கு மும்பையில் திருமண கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் பாரம்பரியத்தின் படி வெள்ளை வேட்டி – சட்டையுடன் டெவான் கான்வேயும், மஞ்சள் நிற புடவையில் கிம் வாட்சனும் நிகழ்வில் தோன்றினார். அது மட்டுமல்ல தல டோனி உட்பட CSK அணி வீரர்கள் அனைவரும் வேட்டி சட்டையுடன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் என களைகட்டிய திருமண கொண்டாட்டம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள டெவான் கான்வே, தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

278586036 155034746997872 4023845561533733275 n

#Cricket#CSK

Exit mobile version