upul 56456
விளையாட்டுசெய்திகள்

எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் இலங்கை வீரர்

Share

நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் 20–20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் உபுல் தரங்க பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன, இந்தத் தொடரில் பைரவா கிளேடியேட்டர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி உபுல் தரங்க பங்கேற்கவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 26 சர்வதேச 20– 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 407 ஓட்டங்களை குவித்துள்ள தரங்க, உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கழக மட்ட இருபதுக்கு 20 போட்டிகள் 126 இல் விளையாடியுள்ளார்.

அவற்றில் இரண்டு சதங்கள், 19 அரைச்சதங்கள் அடங்கலாக 3384 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...

13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...