எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் இலங்கை வீரர்

upul 56456

நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் 20–20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் உபுல் தரங்க பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன, இந்தத் தொடரில் பைரவா கிளேடியேட்டர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி உபுல் தரங்க பங்கேற்கவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 26 சர்வதேச 20– 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 407 ஓட்டங்களை குவித்துள்ள தரங்க, உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கழக மட்ட இருபதுக்கு 20 போட்டிகள் 126 இல் விளையாடியுள்ளார்.

அவற்றில் இரண்டு சதங்கள், 19 அரைச்சதங்கள் அடங்கலாக 3384 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version