செய்திகள்விளையாட்டு

33 ரன்களால் வென்றது இலங்கை

image cc4b02ff58
Share

T – 20 உலகக்கிண்ண தொடரின் எட்டாவது சீசன் அக்டோபர் 16ஆம் திகதி முதல் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற உலகக்கிண்ண T – 20 பயிற்சிப்போட்டியில் இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாப்வே அணியை வெற்றி கொண்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதனையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர், 189 என்ற வெற்றியிலக்கை நோக்கி விளையாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்ஷன மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...