T20 உலகக்கோப்பை போட்டியில் இன்று பங்களாதேஷுடன் தென்னாபிரிக்கா மோதியது.
முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் 18.2 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 84 ரன்களை எடுத்தது.
85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடியது.
முதல் 6பந்து வீச்சுகளில் ரீசா ஹென்றிக்ஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் .
பின் துடுப்பாடிய டி காக், 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
பவர் பிளே ஓவர்கள் முடிவில் 33 ரன்களுக்கு 3 இலக்குகளை இழந்திருந்தது.
பின்னர் அணியின் தலைவர் பவுமா உடன் 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் டுசென் (Rassie van der Dussen). 22 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
13.3 ஓவர்கள் முடிவில் 4 இலக்குகள் இழப்பிற்கு 86 ரன்களை எட்டியது தென்னாப்பிரிக்கா இதன் மூலம் சூப்பர் 12 சுற்றில் மூன்றாவது வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது.
இந்த போட்டியில் மூன்று இலக்குகளை வீழ்த்திய ரபாடா ஆட்ட நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#sports
Leave a comment