நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

india 5

india

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூர் துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் T 20 துடுப்பாட்ட போட்டியில் விளையாடின.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 164 ஓட்டங்களை எடுத்தது.

165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா துடுப்பெடுத்தாடியது.

அணித்தலைவர் ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ராகுல், 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

ராகுல் மற்றும் ரோகித் 50 ஓட்டங்களுக்கு இணையட்டம் அமைத்தனர்.

பின்னர் சூரியகுமார் யாதவ், ரோகித் உடன் சேர்ந்து 59 ஓட்டங்களுக்கு இணையட்டம் அமைத்தார்.

அணித்தலைவர் ரோகித் 36 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

சூரியகுமார், 40 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயஸ் ஐயர் 5 ஓட்டங்களிலும், வெங்கடேஷ் ஐயர் 4ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடைசி 4 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அக்சர் பட்டேல் மற்றும் பண்ட் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரின் நான்காவது பந்தில் பண்ட் நான்கு ஓட்டங்களை எடுக்க இந்தியா 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#SPORTS

Exit mobile version