அவுஸ்திரேலியா- மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதி போட்டியொன்றில் ஏழாம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி, ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார்.
மெல்போர்னில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35 வயதான ஸ்பெயின் வீரரான நடால் 6-3, 6-2 ,3-6 ,6-3 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரரான மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஸ்பெயின் வீரரான நடால் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் மெட்விதேவ் அல்லது கிரீசின் சிட்சிபாஸ் ஆகியோரில் ஒருவருடன் மோதவுள்ளார்.
இறுதிப் போட்டியில் நடால் வெற்றி பெற்றால் நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரருடனான மும்முனைப் போட்டியை முறியடித்து, அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களைப் வென்ற வீரர் என்ற சாதனையினை பெறுவார்.
தற்சமயம் மூன்று வீரர்களும் 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் நடால் 6-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஒரே ஒருமுறை (2009-ம் ஆண்டு) வென்றுள்ளார்.
Leave a comment