இந்தியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லை யுவதி!

277371431 284227340540596 5732079482642722028 n

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த யோகராசா நிதர்சனா இந்தியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நேற்று மாலை 5 மணிக்கு சென்னையில் இலங்கை மற்றும் இந்திய அணியினர்களுக்கிடையில் INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து

இப்போட்டியில் இலங்கை அணிவீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த S.சிறீதர்சன், T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்.

ஆசிரியர் நந்தகுமாரிடம் பயிற்சி பெற்ற குறித்த நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் ஒருவர் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் போட்டியில் பங்குபற்றிய முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யோகராசா நிதர்சனா என்ற தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் யுவதியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து நாட்டிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version