இந்தியா அணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

tamilni 229

இந்தியா அணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான முறையில் விளையாடி பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்றையதினம் இடம்பெற்ற அரையிறுதிப்போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை விராட்கோலியின் 50ஆவது ஒரு நாள் சதத்தினை பாராட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version