கென்யாவின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை எக்னஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கென்யாவின் மெய்வல்லுநர் வீராங்கனை எக்னஸ் டிரோப், அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென அந்நாட்டு பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கென்ய வீராங்கனையான 25 வயதுடைய எக்னஸ், அவரது கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், தலைமறைவாகியுள்ளதாகக் கருதப்படும் குறித்த சந்தேகநபரை தேடி அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவர் இரண்டு முறை உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதுடன், அண்மையில் இடம்பெற்ற ஒலிம்பிக்
மூயாயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
கடந்த மாதம், ஜேர்மனியில் மகளிருக்கான 10 கிலோ மீற்றர் வீPதியோட்டப் போட்டியில் டிரோப் உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment