ரவி சாஸ்திரிக்கு கொவிட் தொற்று!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று மாலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில் ஈடுபட்ட பந்துவீச்சு பயிற்சியாளர் பி.அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து வருகின்ற நிலையில் 4 ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.