டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள விராட் கோலி, தன்னுடைய ஈகோவை விட்டு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் தனது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது பதவி விலகல் தொடர்பாக பலரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விராட் கோலியின் இம்முடிவை வரவேற்கின்றேன் என்றும் டி20 கேப்டன் பதவியை கைவிட்டதில் இருந்து பல சவால்களைச் சந்திக்கிறார் என்றும் முன்னாள் வீரரான கபில்தேவ், கூறியுள்ளார்.
ஒருவேளை, அவர் கேப்டன் பதவியை மகிழ்ச்சியாக அனுபவிக்கவில்லை என்று கூட நினைக்கிறேன் என்றும் எனக்கு ஈகோ இல்லை.
கோலி தனது ஈகோவை விட்டுவிட்டு இளம் கிரிக்கெட் வீரரின் கீழ் விளையாட வேண்டும். இது அவருக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SportsNews,
Leave a comment