ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்!
இலங்கை அணி சார்பில் ஐ.பி.எல். விளையாடவுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். 2021 இல் பங்கேற்பதற்காக 6 தென்னாபிரிக்க வீரர்களுடன் இன்று சிறப்பு விமானத்தில் டுபாய் பயணமாக உள்ளனர்.
இலங்கை-தென்னாபிரிக்கா தொடரில் பங்கேற்கும் வீரர்களையும், ஊடு கரீபியன் பிரிமியர் லீக் வீரர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்ல எட்டு ஐ.பி.எல். உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் டுபாய் பயணமாகவுள்ளனர்.
கொவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட 14 வது சீசன் ஐீடு போட்டிகள், எதிர்வரும் 19 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment