24 661b94a7ee231
செய்திகள்விளையாட்டு

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம்

Share

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம்

அடுத்த ஆண்டு தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சீசனில் ரோகித் சர்மா அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய தலைவராக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார்.

ரோகித் சர்மா அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன் ஐ.பி.எல். போட்டி தொடரின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார். இதற்கிடையே, அடுத்த ஆண்டு ரோகித் சர்மா வேறு அணிக்கு மாறக்கூடும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்வார் என நினைக்கிறேன்.

சென்னை அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார். அடுத்த ஆண்டு ரோகித் சர்மாவை சென்னை அணி தலைவராக பார்க்கலாம்.

ஹர்திக் பாண்டியா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறார். இது அவரது தவறு கிடையாது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருக்கிறீர்களா என்று அணி நிர்வாகம் கேட்டால் எந்த வீரர் தான் வேண்டாம் என்று சொல்வார்.

இந்திய டி20 அணியின் தலைவராக இருக்கும் ரோகித் சர்மாவை மும்பை அணி தலைவராக இந்த ஆண்டு நீட்டித்திருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
7 6
இலங்கைசெய்திகள்

வெகுவிரைவில் அடுத்த தேர்தலுக்கு வாய்ப்பு

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம்...

8 6
இலங்கைசெய்திகள்

எந்த அரசியல்வாதிகளும் தப்பவே முடியாது..! அநுர தரப்பு சூளுரை

இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு சந்தேக நபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள்...

10 6
இலங்கைசெய்திகள்

நாடு நாடாக சென்று நிதி திரட்டுவேன்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை நாடு நாடாக சென்று திரட்ட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...

11 6
இலங்கைசெய்திகள்

ஹிட்லரின் பாதையில் அநுர அரசு – ரணில் கடும் குற்றச்சாட்டு

அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று...