ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை இந்திய அணி பிடித்துள்ளது.
2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் 14 தொடர்களில் பங்கேற்ற இந்திய அணி, 14 தொடரிலும் வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
இதுவரை காலமும் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கு பின் நோக்கி தள்ளப்பட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை இந்திய அணியை இந்திய கிரிக்கட் சபை பாராட்டியுள்ளது.
Leave a comment