aman
செய்திகள்விளையாட்டு

தங்கம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத் !

Share

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைபிரிவின் இறுதிஆட்டத்தில் இந்திய இளம் வீரர் அமன் ஷெராவத், கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மன்பெகோவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த மோதலில் அமன் ஷெராவத் 9-4 என்ற புள்ளி கணக்கில் அல்மாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

அரியானாவை சேர்ந்த 19 வயதான அமன் ஷெராவத் கடந்த ஆண்டு நடந்த 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் தீபக் குக்னா (79 கிலோ), தீபக் நெஹ்ரா (97 கிலோ) ஆகியோர் தங்களது அரைஇறுதியில் தோல்வியை சந்தித்து வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் களம் காணுகின்றனர்.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...