செய்திகள்விளையாட்டு

விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை

Share
rtjy 270 scaled
Share

விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் எதிருவரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது .

10 ஆண்டுகளாக ஐசிசி கிண்ணத்தை வெல்லாத இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில் உலகக்கிண்ணத்திற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் வரும் எதிர்வரும் 30ஆம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

உலகக்கிண்ணத்திற்கு வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையில் 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வீரர்களின் உடற்தகுதி குறித்து சோதிக்கும் யோ யோ தேர்வு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

அதன்படி யோ யோ தேர்வில் நட்சத்திர வீரர் விராட் கோலி கலந்து கொண்டு உடல் தகுதியை நிரூபித்தார். அனைத்து விதமான சோதனைகளையும் கடந்து 17.2 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பதிவு தொடர்பில் அவருக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“யோ யோ தேர்வு குறித்த புகைப்படத்தை பதிவிடலாம், ஆனால் மதிப்பெண்ணை யாரைக் கேட்டு பதிவிட்டீர்கள்” என்று பிசிசிஐ கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும், எந்த வீரரும் யோ யோ தேர்வு குறித்த மதிப்பெண்ணை வெளியிடக்கூடாது என பிசிசிஐ அணைத்து வீரர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...