LOADING...

ஆவணி 5, 2023

பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!

பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!

பிரித்தானியாவில் தேசிய புகைப்பட விருது ஒன்றிற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ள 20 புகைப்படங்களில், மகாராணியாரின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் புகைப்படங்களுக்கான தேசிய விருது அல்லது, UK Picture Editors’ Guild awards, அல்லது 2022 photo of the year விருது என்று அழைக்கப்படும் விருதுக்காக, 20 புகைப்படங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில், மக்கள் தங்களுக்குப் பிடித்த புகைப்படத்துக்கு வாக்களித்து, அதை 2022ஆம் ஆண்டுக்கான புகைப்படமாக தேர்வு செய்யலாம்.

செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரை மக்கள் வாக்களிக்கலாம். தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் குறித்த முடிவுகள், அக்டோபர் 16ஆம் திகதி வெளியிடப்படும்.

மகாராணியாரின் இறுதி புகைப்படங்களில் ஒன்று
விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களில் மகாராணியாரின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

லிஸ் ட்ரஸ் பிரதமராக தெர்வு செய்யப்பட்டபோது, அவரை சந்திப்பதற்காக மகாராணியார் வந்திருந்தபோது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. 8ஆம் திகதி, மகாராணியார் இயற்கை எய்திவிட்டார். ஆகவே, இந்த புகைப்படம் சிறப்பு வாய்ந்த ஒரு புகைப்படமாக கருதப்படுகிறது.

மேலும், தன் தாய் இளவரசி கேட்டின் வாயை கையால் மூடும் குட்டி இளவரசர் லூயிஸின் புகைப்படம், மகாராணியாரின் அருகே நின்றபடி, விமானங்களின் சத்தத்தைக் கேட்டு காதை மூடிக்கொள்ளும் லூயிஸ், மன்னரானதும் தன் பணியைத் துவக்கும் சார்லஸ், கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகக்கோப்பையை பிடித்திருக்கும் புகைப்படம் மற்றும் உக்ரைன் போர் தொடர்பான படங்கள் ஆகியவை நாமினேஷனில் உள்ளன.

Prev Post

வங்கி முறைமை வீழ்ச்சியடையும்! ரணில் எச்சரிக்கை

Next Post

குப்பை லொறியில் சிக்கி மகள் கண்முன்னே தாய் பலி

post-bars

One thought on “பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!

Leave a Comment