தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

1774186 kishan1

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர். தவான் 13 ரன்னிலும் கில் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்தியா 2 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய இஷான் கிஷன் ஜோடி நேர்த்தியாக ஆடியது. கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். அரை சதம் கடந்த இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.

3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்களை குவித்து அசத்தியது. அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ஒத்துழைக்க இந்திய அணி வெற்றிப் பாதைக்குச் சென்றது. பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இது அவரது 2வது சதமாகும். இறுதியில், இந்திய அணி 45.5 ஓவரில் 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன்னுடனும், சாம்சன் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

#Sports

 

Exit mobile version