ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி, இந்தியா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியுள்ளது
ஓமன் நாட்டில் நடைபெறும் ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சீனாவுடன் மோதியது.
ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடியிருந்தனர். இந்தியா தரப்பில் குர்ஜித் கவுர், ஷர்மிளா தேவி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதனால் முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்று, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இந்தநிலையில் ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி ஜப்பான் தங்கப்பதக்கம் வென்றது.
#Sports
Leave a comment