download 5 1
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி !

Share

ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது ஆட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. முகமது ஷமியின் வேகப்பந்தில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன.

துவக்க வீரர் பில் சால்ட், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து வார்னர் 2 ரன், ரிலி ரூசோ 8 ரன், மணீஷ் பாண்டே ஒரு ரன், பிரியம் கார்க் 10 ரன்னில் அவுட் ஆகினர்.

23 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. நெருக்கடியான சூழ்நிலையில், அக்சர் பட்டேல் 27 ரன்களும், அதிரடியாக ஆடிய அமான் ஹக்கிம் கான் 51 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர்.

கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிப்பல் பட்டேல் 23 ரன்கள் விளாசினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

மோகித் சர்மா 2 விக்கெட், ரஷித் கான் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.

இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா அரை சதம் எடுத்து 59 ரன்களில் ஆட்டமிழக்காமல் கடைசி வரை விளையாடினார். தொடர்ந்து, அபிநவ் மனோகர் 26 ரன்களும், ராகுல் திவாடியா 20 ரன்களும், சுப்மன் கில் 6 ரன்களும் எடுத்தனர்.

ரஷித் கான் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபாரமாக வெற்றிபெற்றுள்ளது.

#sports

Share
தொடர்புடையது
mothiram
விளையாட்டு

வருகிறார் அமெரிக்க அதிபர் – தருகிறார் மோதிரம்.

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...