2022 ஆம் ஆண்டின் முதலாவது கிண்ணத்தை சுவீகரித்தது மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம்.

மட்டக்களப்பு – சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக் கழகம் தனது 12 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை நடாத்தியிருந்தது.

கடந்த 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற்ற குறித்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 24 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இதில் விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும், மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் குறித்த நேரத்தில் இரு அணிகளும் எந்தவித கோள்களையும் உட்புகுத்தாத நிலையில் தண்ட உதைமூலம் போட்டியில் வெற்றி தேல்வி தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தண்ட உதையில் மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று முதலாம் இடத்தினை பெற்றுக்கொள்ள விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சிறந்த வீரனாக விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழக வீரன் அருணகிரிநாதன் யுதர்சன் (யனு) தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG 20220418 WA0012

#Sports

Exit mobile version