ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 50 ஓவர்களை கொண்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு ஸ்ரீலங்கா அணி தகுதி பெற்றுள்ளது.
சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஸிம்பாப்வே அணியை 09 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டதன் மூலம் ஸ்ரீலங்கா அணி இந்த வாய்ப்பை தனதாக்கியுள்ளது.
புலவாயோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரீலங்கா அணி பத்தும் நிஷ்ஷங்க பெற்ற சதத்தின் உதவியுடன் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மகேஷ் தீக்ஷன தெரிவுசெய்யப்பட்டார்.
Leave a comment