அவுஸ்திரேலிய அதிகாரிகள் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்திருந்த நிலையில், ஜோகோவிச்சை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சென்றிருந்த நிலையில்,
கொவிட் தடுப்பூசி ஏற்றுகை பற்றிய விபரங்களை வழங்கத் தவறிய காரணத்தினால் அவர் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார்.
இதனையடுத்து தனது விசா இரத்து செய்யப்பட்டமையை எதிர்த்து ஜோகோவிச் அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஜோகோவிச் ஹோட்டல் தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும், விசாவை இரத்து செய்த அரசாங்கத்தின் தீர்மானம் பிழையானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அமைச்சு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசா இரத்து செய்யப்பட்டால் அவர் 03 ஆண்டுகளுக்கு அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்பட மட்டார் என நீதிபதி அந்தனி கெல்லி தெரிவித்துள்ளார்.
இதன்படி, அமைச்சரவை அதிகாரம் பயன்படுத்தப்பட்டு விசா மீளவும் இரத்து செய்யப்பட்டால், டென்னிஸ் வீரரான ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்குள் 03 வருடங்கள் நுழைவதற்கு முடியாத நிலை உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
#SportsNews

