235990044 200681745444701 2377461218185862087 n
விளையாட்டுசெய்திகள்

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த சிஜெ உய்ஜாவுக்கு தற்காலிகத் தடை!!

Share

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த சிஜெ உய்ஜாவுக்கு தற்காலிகத் தடை!!

ரோக்கியோ ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த ரிலேவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரித்தானியா தடகள வீரர் சிஜெ உய்ஜா (CJ Ujah) தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரோக்கியோ ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறினர் என நான்கு விளையாட்டு வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தடகள ஒருமைப்பாடு பிரிவு அறிவித்துள்ளது.

மொராக்கோவின் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர் சாதிக் மிகோவ், ஜார்ஜிய ஷாட் புட்டர் வீரர் பெனிக் அப்ரமியன், கென்ய sprinter Mark Otieno Odhiambo மற்றும் பிரித்தானியா sprinter CJ Ujah ஆகிய நால்வரும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்கள் 4×100 மீட்டர் ரிலேவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரித்தானியா அணி வீரர்கள் நான்கு பேரில் CJ Ujah ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோக்கியோ ஒலிம்பிக்கில் ஓகஸ்ட் 6ஆம் திகதி நடந்த ஆண்கள் 4×100 மீட்டர் ரிலேவில் இத்தாலி அணி முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றது, பிரித்தானியா அணி 2ஆவது இடம் பிடித்து வெள்ளியும், கனடா அணி 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கமும் வென்றது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு வீரர்களுக்கு எதிரான ITA சர்வதேச சோதனை முகமை முடிவுக்கு காத்திருக்கின்றோம் என்று தடகள ஒருமைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து வீதி மீறல்கள் நடந்துள்ளனவா மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ITA தீர்மானிக்கும்.

உலக தடகள ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள் அல்லது நடத்தை விதிமுறைகளின் கீழ் நடத்தப்படும் விசாரணையில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்த நான்கு வீரர்களும் எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து விதிகளை மீறியது உறுதியானால், பிரித்தானியா ரிலே அணி வெள்ளிப் பதக்கங்களை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3ஆவது இடத்தை பிடித்த கனடாவுக்கு வெள்ளிப் பதக்கமும், நான்காவது இடத்தில் உள்ள சீனாவுக்கு வெண்கலமும் வழங்கப்படும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...