image 45dfa1cfeb 1
செய்திகள்இலங்கை

தந்தையை இறக்கும் வரை கொன்ற மகன் – இலங்கையில் தான் நடந்தது!!

Share

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தந்தையின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில்டெல்மார் மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுப்பிரமணியம் செல்வநாயகம், வயது 62 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் சண்டையாக மாறியுள்ள நிலையில் மகன் தந்தையை இரும்பு ஒன்றால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான தந்தையின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து அதிக இரத்த போக்கு காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனை கைது செய்துள்ள இராகலை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராகலை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...