காலி – மஹமோதர பகுதியில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகி 16 வயது பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த மாணவன் சில மாதங்களாக ஒன்லைன் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் தந்தை கண்டித்துள்ளதுடன், மகனை தும்புத்தடியால் தாக்கியுள்ளார்.
இதன்போது மயக்கமடைந்த நிலையில், சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தந்தை கைது செய்யப்பட்டு காலி பிரதான நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தந்தைக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் இந்த முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment