Smart தடுப்பூசி சான்றிதழ்! – புதிய திட்டம் ஆரம்பம்!

0F73196F 9A34 4E88 9735 C6BB2978829D

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்காக ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் (Smart Vaccine Certificate) வழங்கும் திட்டம் சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் விபரங்களைப் பதிவிட்டு ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு, உலக சுகாதார அமைப்பு (இலங்கை), இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட் முகவர் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

https://covid-19.health.gov.lk/certificate/ என்னும் இணைய இணைப்புக்குள் பிரவேசிப்பதன் மூலம் ஸ்மார்ட் தடுப்பூசிச் சான்றிதழைப் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version