ஐக்கிய மக்கள் சக்தியினால் நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றங்கள் மறுத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன
இந்தநிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க பல நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.
சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கான பொலிஸார் நீதிமன்றங்களை நாடியிருந்தனர்.
அதனடிப்படையில் புதுக்கடை 5 ஆம் இலக்கம், மஹர 1 ஆம் மற்றும் 2 ஆம் இலக்கங்கள், கடுவலை, மஹரகம மற்றும் ஹொரண ஆகிய நீதிமன்றங்களினால் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடையுத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவை மாளிகாகந்த, கங்கொடவில மற்றும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஆகியன நிராகரித்துள்ளன.
#SrilankaNews