268555878 444984940488135 6310740826354725216 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையிலும் சிங்கம் சூர்யா – குவியும் பாராட்டுக்கள்!!!

Share

கொழும்பு புறக்கோட்டை வீதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய நபரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கம் பட சூர்யா பாணியில் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புறக்கோட்டை பிரதான வீதியில் வாகனங்களை நிறுத்த முடியாத இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் உரிய பொலிஸ் உத்தியோகத்தர் அவதானித்துள்ளார் .

இதுதொடர்பாக அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது யாருடையது என தகவல் எதுவும் கிடைக்கவில்லை.எனினும், சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் வந்து அதனை இயக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

அவ்வேளையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வந்து இங்கு மோட்டார் சைக்கிள் நிறுத்திய குற்றச் செயல் தொடர்பில் விசாரணை செய்ய முற்படுகையில் மோட்டார் சைக்கிளை இயக்கியவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளை எட்டிப்பிடித்துள்ளார் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை செலுத்தியதுடன் பிடித்த பொலிஸ் உத்தியோகத்தரை வீதியில் இழுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுமார் 70 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதி சரிந்துள்ளது.

இதனையடுத்து பிரதான வீதியில் மக்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரை தப்பிச் செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்ததுடன் அந்த பொலிஸ் உத்தியோகத்தரை தூக்கி உதவி செய்தனர்.

இச்சம்பவத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...