பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பெறும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றது.
நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்பட பல்வேறு செயல்களுக்கு காரணமாகஅமைந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக குறித்த கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.
குறித்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கையில் பல பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
#SriLankaNews
Leave a comment