ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டைக் கையளித்தால், 48 மணித்தியாலங்களில் எரிவாயுவின் விலை குறையும்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கைப்பற்றும் போது இவ்வாறான நெருக்கடியான நிலையிலேயே கைப்பற்றியிருந்தார்.
அத்துடன் பாரிய மாற்றங்களையும் அவர் ஏற்படுத்தியிருந்தார்.
ஆகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டைக் கையளியுங்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment