நாட்டில் மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு!
நாட்டில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், விற்றமீன்-சி,பனடோல் மற்றும் பரசிடோமல் உட்பட 6 வகையான மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக வீடுகளில், விற்றமீன்-சி, பனடோல் மற்றும் பரசிட்டோமல் போன்ற மருந்து வகைகள் மக்களால் கொள்வனவு செய்யப்பட்டு இருப்பில் இருக்கும். இந்த நிலையில், தற்போது இந்த மருந்து வகைகளை கொள்வனவு செய்ய வரும் மக்களுக்கு அவற்றை வழங்கமுடியாது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பாமசி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Leave a comment