நாட்டில் மூன்று மாதங்களுக்கு போதுமான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளன என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது. மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல இடங்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் தரவுகள் இல்லை. இருப்பினும் சுங்க திணைக்களம் மற்றும் மொத்த வியாபாரிகள் போன்றோர் தரவுகள் அடிப்படையில், நாட்டில் மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளன.
ஒரு சில பொருட்களுக்கு சில பகுதிகளில் தட்டுப்பாடு காணப்படலாம். இதேவேளை சந்தையில் தாராளமாக கிடைக்கும் பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யாது பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். – என்றார்.
#SriLankaNews