லெபனான் பெய்ரூட்டில் போராட்டம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீதிபதி ஒருவருக்கு எதிராக ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்கள் மேற்கொண்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக, லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த வருடம் நடாத்தப்பட்டிருந்த குண்;டு வெடிப்பில் 219 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நீதிபதிக்கு எதிராகவே, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்களின் இப்போராட்டத்தில், லெபனீஸ் படைகள் என்னும் குழுக்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்தச் சம்பவத்தை லெபனீஸ் படை அமைப்பு மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a comment