‘ஷாகீன்’-பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதா?

india 2

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘குலாப்’ புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது.

தொடர்ந்து குலாப் புயல் தெலுங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து நேற்றய தினம் தெற்கு குஜராத் மீது மையம் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இப்புயல் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை காலைக்குள் வட அரபிக்கடலில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘ஷாகீன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் நிலை காணப்படுகின்றது.

ஆகவே இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளின் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Exit mobile version