நாட்டில் அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் கொவிட் பரவல் கனிசமானளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும், ஆரம்ப பிரிவு தவிர்ந்த ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் அடுத்துவரும் நாட்களில் வெளியிடப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.
#srilanka
Leave a comment