பதுளையில் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும் லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை நகரிலுள்ள மேலதிக வகுப்புக்கு கடந்த 19 ஆம் திகதி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பில் குறித்த மாணவியின் தாயால் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
நேற்று அவரின் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியன பதுளை கோபோ பகுதியில் நீர் நிலையொன்றின் அருகில் ( தெப்பக்குளம்) இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் இடம்பெற்று, இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment