DEATH 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மலையகத்தில் சோகம்! பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு!! – பொலிஸார் தீவிர விசாரணை

Share

(நுவரெலியா நிருபர்)

பொகவந்தலாவை, செல்வகத்தை தோட்டப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் ஒருவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் பாரதி தர்ஷன் (வயது – 18) என்ற மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை ,சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியைக் கண்டு களித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் குறித்த மாணவன் காணாமல்போயுள்ளார்.

மாணவனை நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள் தேடிய நிலையில், குறித்த மாணவனின் சடலம் கிணறு ஒன்றில் இருப்பதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

இதையடுத்து சடலம் மீட்கப்பட்டு பொகவந்தலாவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...