புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாத்ததுடன் அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தில் இன்றையதினம் இந்த நிகழ்வு இடபெற்றது.
தரம் ஐந்து மாணவர்களுக்காகன 2021 புலமை பரிசில் பரீட்சை கொவிட் 19 தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட நிலையில் எதிர் வரும் 22ம் திகதி சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு நடைபெறுவதற்கான பூர்வாங்க செயற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் பரீட்சைக்கு தோற்றம் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வு நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தரம் ஐந்து மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வானது யாழ் மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews