ezgif.com gif maker
செய்திகள்விளையாட்டு

இந்தியா சுழலில் சிக்கி சிதறிய நியுஸிலாந்து!!!

Share

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ஓட்டங்களினால் மிகச் சிறப்பான வெற்றியொன்றைப் பதிவு செய்ததன் மூலம் இந்திய அணி தொடரை 1க்கு 0 என்று வெற்றி கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் 540 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் இந்திய அணியின் சுழல் ஜாம்பவான் அஸ்வின், ஜெயந் ஜாதவ் தலா நான்கு இலக்குகளையும் அக்சர் பட்டேல் ஒரு இலக்கையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக மயாங் அகர்வால் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடர் நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.

முன்னதாக இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நியூஸிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரையும் 3 க்கு 0 எனும் அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியிருந்தது.

இதேவேளை டெஸ்ட் அரங்கில் அதிக இலக்குகளை கைப்பற்றிய இந்தியர்கள் வரிசையில் அஸ்வின் 300 இலக்குகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியதுடன் இந்தியாவில் அதிக ஓட்டங்களில் வெல்லப்பட்ட டெஸ்ட் போட்டியாகவும் இது பதிவானது.

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
HK5OOCOO5VF7LD6ZPEDZS5GCQI
உலகம்செய்திகள்

எத்தியோப்பியாவில் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு எரிமலை வெடிப்பு: மத்திய கிழக்கு விமான சேவை பாதிப்பு!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை, சுமார்...

IMG 20240818 105431 800 x 533 pixel
செய்திகள்இலங்கை

தொடக்கப்பள்ளி மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: ஆசிரியரைக் கைது செய்யச் சிறப்புப் பொலிஸ் குழுக்கள் அமைப்பு!

பாடசாலை விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்துவதாகக் கூறி மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவரைப் பாலியல்...

23 651d55bc70ebc
செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு கொக்காவில் இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: இராணுவ வீரர் படுகாயம்!

முல்லைத்தீவு, கொக்காவில் 4-இல் அமைந்துள்ள இராணுவ ஆயுதப் புலனாய்வுப் படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

MediaFile 4 3
செய்திகள்இலங்கை

இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரம்: அமைச்சரவை அனுமதி வழங்கியது!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரங்களை (Italian Driving Licenses) வழங்குவதற்கான திட்டத்திற்கு...